திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி பள்ளி மாணவி உலக சாதனை

அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்  4ஆம் வகுப்பு மாணவி வர்ஷிஹா(9) 2 மணி நேரத்தில் 23 கி.மீ. தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

News image
நோபல் உலக சாதனை நிகழ்த்திய மாணவி வர்ஷிஹா
Updated On :6 மார்ச் 2021, 10:38 am

DIN

அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்  4-ஆம் வகுப்பு மாணவி வர்ஷிஹா(9) 2 மணி நேரத்தில் 23 கி.மீ. தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பட்டுக்கோட்டையில்  உலக மகளிர் தினத்தை முன்னிட்டும், நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நமது ஜனநாயக உரிமையான வாக்கினை யாருக்கும் விற்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் புதிய உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மாலா தம்பதியரின் 9 வயது மகள் வர்ஷிஹா. 

Story image

இவர்  அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை நடைபெற்ற உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில்  2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கிய நோபல் உலக சாதனை நிகழ்ச்சியைப் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

சாதனை படைத்த மாணவி வர்ஷிஹாவை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நோபல் உலக சாதனை,  நடுவர் அர்ஜுனன் முன்னிலையில் மாணவி வர்ஷிஹாகவுக்கு சான்றிதழ் வழங்கி நோபல் உலக சாதனைக்கான பதக்கத்தை அணிவித்தனர்.

சாதனை நிகழ்த்திய மாணவி வர்ஷிஹா, பயிற்சியாளர் ஏ.ஷீலா   மற்றும் அவரை ஊக்குவித்த தன்னார்வலர்கள் அனைவரையும் எஸ்.இ.டி.வித்தயாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக இயகுநர் எல்.கோவிந்தாரசு நன்றி பாராட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.