சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை நதியோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
எல்லா மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமுடன் வாழ வேண்டி நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை நடத்தினர்.
ஆனந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் போது உற்சவர் ஆனந்தவல்லி அம்மன் அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
திருவிளக்கு பூஜையின் நிறைவாக மங்கள ஆரத்தி நடைபெற்று முடிந்து ஆனந்தவல்லி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் பெண் பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


