திருப்பூரில் சாலை விபத்து: 2 தொழிலாளிகள் பலி
திருப்பூர் மங்கலம் சாலையில் லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.


திருப்பூர் மங்கலம் சாலையில் லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி (45), அய்யன் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி(35), இந்த இருவரும் திருப்பூரில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், வேலுசாமியின் இருசக்கர வாகனத்தில் இருவரும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது இருசக்கர வாகனம் தாடிக்கார முக்கு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த கான்கிரீட் கலவை ஏற்றிச் செல்லும் லாரியை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வேலுசாமி, கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் மத்திய காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
லாரியை ஓட்டி வந்த திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக மங்கலம் சாலையில் சில நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...