மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அருப்புக்கோட்டை தொகுதிக்கான 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதிக்கான 389 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல்

News image
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி கோட்டாட்சியர் முருகேசன், துணை தேர்தல் அதிகாரி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனியறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
Updated On :8 மார்ச் 2021, 6:54 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதிக்கான 389 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

அருப்புக்கோட்டை தொகுதியில் மொத்தம் 311 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றுக்கான மொத்தம் 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகரிலிருந்து திங்கள்கிழமை உரிய பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி கட்டடம் ஒன்றில் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியர் முருகேசன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு உபமண்டலங்கள் வாரியாக பெட்டிகளில் வைத்து சீல் வைத்த பின், அறைக்கதவும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு மொத்தம்  16 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பில் வைத்து, 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.