சட்டமன்றத் தேர்தல் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் மருத்துவ முகாம் செயல்படவில்லை

சட்டமன்றத் தேர்தல் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப்பகுதியான குமுளி, கம்பமெட்டு பகுதியில்,  மருத்துவமுகாம், சோதனைச் சாவடிகள்  செயல்படவில்லை.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடி.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடி.
Published on
Updated on
1 min read


கம்பம்: சட்டமன்றத் தேர்தல் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப்பகுதியான குமுளி, கம்பமெட்டு பகுதியில்,  மருத்துவமுகாம், சோதனைச் சாவடிகள்  செயல்படவில்லை.

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி, கம்பமெட்டு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக இ-பாஸ் அனுமதி மற்றும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி வழியாக மட்டும் கேரளத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் கரோனா பரவல் காரணமாக மாநில எல்லைகளில் இ-பாஸ் கட்டாயம் என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இதனால் திங்கள்கிழமை தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோட்ட தொழிலாளர்கள் குழப்பமடைந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த  அளவில் இ-பாஸ் அனுமதி, மருத்துவ முகாம் எதுவும் அமைக்கப்படவில்லை.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மருத்துவ முகாம் இருந்த இடம்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மருத்துவ முகாம் இருந்த இடம்.

இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றார்.

இதே போல் குமுளி காவல் நிலைய காவலர்களிடம் கேட்ட போது, கடந்த முறை அருகிலேயே இ-பாஸ் மற்றும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com