இந்தக் கூட்டணியில், புதுச்சேரியில் 16 இடங்களில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும், பாஜக - அதிமுக கட்சிகள் மீதமிருக்கும் 14 இடங்களில் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பாஜக நடத்திய தொடா் பேச்சுவாா்த்தையால் என்.ஆா்.காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைவது நேற்று இரவு உறுதியானது.
பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று இரவு முடிவு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த அறிவிப்பை என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று அறிவித்தார்.
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் - அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் விலகி பாஜகவில் இணைந்தனா்.