புதுகையில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
புதுக்கோட்டையில் 100 சதவிகித வாக்குப் பதிவுக்கான வாக்காளர் விழிப்புணர்வுக்காக செவ்வாய்க்கிழமை காலை வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 100 சதவிகித வாக்குப் பதிவுக்கான வாக்காளர் விழிப்புணர்வுக்காக செவ்வாய்க்கிழமை காலை வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
பொது அலுவலக வளாகத்தில் இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
_.jpeg)
மாரத்தான் ஓட்டத்தில் நகராட்சிப் பணியாளர்கள், துணை ராணுவப் படையினர், காவல் துறையினர், கல்வித் துறையினர் பங்கேற்றனர்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்த இந்த மாரத்தான் ஓட்டம் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...