செங்கல்பட்டு அருகே உரிய ஆவணங்களின்றி ரூ. 1.08 கோடி பறிமுதல்
செங்கல்பட்டு அருகே வியாழக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1.08 கோடி பறிமுதல் செய்தனர்.


செங்கல்பட்டு அருகே வியாழக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1.08 கோடி பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுச்சாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செங்கல்பட்டு நகரத்தில் உள்ள ஏ.டி.எம் வங்கியில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை மறித்துச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வாகனத்தில் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பணம் இருந்த இரண்டு வாகனத்தையும் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு இரண்டு வாகனத்திலிருந்த 1 கோடியே எட்டு லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் செங்கல்பட்டில் ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...