தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News image
நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர்
Updated On :11 மார்ச் 2021, 11:04 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான ஊட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்று, மெல்ல படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.