டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக நேரடிப் போட்டி

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2021, 1:58 pm

DIN

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் குறித்த பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. 
இதன்படி கோவை தெற்கு, விளவங்கோடு, காரைக்குடி, குளச்சல் மற்றும் உதகை ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக தேர்தலை சந்திக்கின்றன. இதேபோல் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.  
15 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் நேரடிப் போட்டி
பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை
3 தொகுதிகளில் காங்கிரஸ் - பாமக நேரடிப் போட்டி
சோளிங்கர், விருத்தாசலம், மயிலாடுதுறை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.