லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாமக்கல் தொகுதியில் காந்தி வேடமணிந்து மனுத் தாக்கல் செய்த பொறியாளர்

நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மென் பொறியாளர் ஒருவர் காந்தி வேடம் அணிந்து வந்து மனுத் தாக்கல் செய்தார்.

News image
காந்தி வேடமணிந்து மனுத் தாக்கல் செய்த பொறியாளர்!
Updated On :12 மார்ச் 2021, 9:43 am

DIN

நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மென் பொறியாளர் ஒருவர் காந்தி வேடம் அணிந்து வந்து மனுத் தாக்கல் செய்தார்.

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டி. ரமேஷ் (40). இவர் மென் பொறியாளராக பணியாற்றி தற்போது காந்திய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு 968 வாக்குகள் பெற்றார். 

Story image

அண்மையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் அனைத்து  கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.4 லட்சம் வரை கட்டாய கடன் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை செல்லப்பம்பட்டியிலிருந்து நாமக்கல் வந்தவர் குளக்கரை திடலில் காந்தி பேசிய மேடை அருகில் தனது வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். 

தொடர்ந்து சைக்கிளில் நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.கோட்டைக் குமாரிடம் நாமக்கல் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

மகாத்மா காந்தி பேசிய மேடை முன்பாக வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் தி.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.