கும்மிடிப்பூண்டி: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் 

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் 
Published on
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கிழ்முதலம்பேடு ஊராட்சி, கவரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் டி.ஜெ.கோவிந்தராஜன்(60) தந்தை பெயர் வி. ஜெயராமன், தாய் லட்சுமி அம்மாள். இவரது மனைவி கீதா(52). இவருக்கு தமிழரசன், தமிழரசி என்கிற மகன், மகள் உள்ளனர். டி.ஜெ. எஸ் கல்வி குழுமத்தின்  தலைவர் ஆகவும், தொழிலதிபராகவும் இவர் உள்ளார். 
 
இவர் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் பிஏ வரை படித்துள்ளார். ஆவர் முதன் முதலில் திமுக-வில் 1993 ஆம் ஆண்டு உறுப்பினரானார். 1996ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவர் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்து தற்பொழுது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

தற்போது இவர் திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2006-2016 வரை 3 தேர்தல்களில் திமுகவின் நேரடி வேட்பாளர் கும்மிடிப்பூண்டியில் போட்டியிடாத நிலையில் 15வருடங்கள் கழித்து கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு திமுக வை சேர்ந்த இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com