புதுச்சேரி ம.நீ.ம. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரியில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று அறிவித்துள்ளது. இதன்படி திருபுவனை - ராமேஷ், வில்லியனூர் - பானுமதி, உழவர்கரை - பழனிவேலன், கதிர்காமம் - சதானந்தம், இந்திரா நகர் - சக்திவேல், தட்டாஞ்சாவடி - ராஜேந்திரன், காமராஜ் நகர் - லெனின், லாஸ்பேட்டை - சத்யமூர்த்தி, காலாபேட்டை - சந்திரமோகன், ராஜ்பவன் - பர்வதவர்தினி, உப்பளம் - சந்தோஷ்குமார், உருளையன்பேட்டை - சக்திவேல், நெல்லித்தோப்பு - முருகேசன், முதலியார்பேட்டை - அரிகிருஷ்ணன், அரியாங்குப்பம் - ருத்ரகுமார், ஏம்பலம் - சோமநாத், நெட்டப்பாக்கம் - ஞானவொளி, நெடுங்காடு - நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...