தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருநள்ளாற்றில்  தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா
Updated On :12 மார்ச் 2021, 6:14 am

DIN

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மகா சிவராத்திரி வழிபாடு சிவ தலங்களில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. மகா சிவராத்திரியில் கோயிலில் சிவலிங்கத்துக்கு நடைபெறும் கால பூஜைகள் சிறப்புக்குரியதாகும். 

காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு, முதல் கால பூஜையும், 2 மணியளவில் 2-ஆம் கால பூஜையும், காலை 3 மணிக்கு 3-ஆம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றது.

ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்கு பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து  மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். 

நான்காம் கால பூஜை முடிந்த பிறகு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத  ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலாவுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார்.   

கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரே ரிஷிகளுக்கு அருள்புரியும் வகையில் ரிஷி தீபாராதனை நடத்தப்பட்டு, பின்னர், கோபுர தீபாராதனையுடன் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30  மணியளவில் நான்கு மாட வீதிகளுக்குப் புறப்பாடானது.

வீதிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். திருநள்ளாறு கோயில் கெய்தான் மண்டபத்தில் சிவராத்திரையொட்டி இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.