டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாஜக வேட்பாளர் பட்டியல்: ஆயிரம் விளக்கில் குஷ்பு போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2021, 11:24 am

DIN

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின்தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் திமுக வேட்பாளரை நேரடியாக எதிர்கொள்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் - வானதி சீனிவாசன், அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவிலிருந்து விலகி இன்று காலை பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி, திருக்கோவிலூர் - கலிவரதன், திருவண்ணாமலை - தணிகை வேல், குளச்சல் - பி.ரமேஷ், ராமநாதபுரம் - டி.குப்புராமு, திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன், துறைமுகம் - வினோத் பி.செல்வம், விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக மகளிர் அணியின் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் நேரடியாக கமல்ஹாசனை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.