காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஊழலின் பிறப்பிடமே திமுகதான்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

இந்தியாவில் ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி, திமுக ஆட்சிதான். அந்த வகையில் ஊழல் என்ற சொல்லின் பிறப்பிடமே திமுகதான் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
ஊழலின் பிறப்பிடமே திமுகதான்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
Updated On :18 மார்ச் 2021, 10:02 am

DIN


நாகப்பட்டினம் : இந்தியாவில் ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி, திமுக ஆட்சிதான். அந்த வகையில் ஊழல் என்ற சொல்லின் பிறப்பிடமே திமுகதான் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

நாகை அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவனை ஆதரித்து, நாகை அவுரித் திடலில் பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியது : அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். அதிமுக அரசு ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக. பல சோதனைகளைக் கடந்து ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட இயக்கம் அதிமுக. மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற பல திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது.

திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை செய்யப்பட்டது என்பதை ஸ்டாலினால் கூற முடியவில்லை. காரணம், அவர்களுக்கு குடும்பம்தான் முக்கியம். ஆனால், அதிமுக அப்படிப்பட்ட இயக்கம் இல்லை. கருணாநிதி, ஸ்டாலின் தற்போது உதயநிதி. அடுத்து, ஸ்டாலினின் பேரன். இது என்ன அரச பரம்பரையா? நாட்டை சுரண்டிய கட்சி திமுக. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. 2 ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.74 லட்சம் கோடியை ஊழல் செய்த கட்சி திமுக. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சி. ஊழல் என்ற சொல் பிறக்கவே திமுகதான் காரணம். ஊழலை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது. 

வீராணம் ஊழல், அரிசி பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல் என திமுக ஆட்சியில் நடைபெற்ற எந்த ஊழலையும் மக்கள் மறக்கமாட்டார்கள். திமுகவின் ஊழல் மக்களின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.