நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு வேட்புமனு தாக்கல்

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News image

கே.என். நேரு வேட்பு மனு தாக்கல்

Updated On :18 மார்ச் 2021, 8:30 am

DIN

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வாகனங்களில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு முன்பாகவே ஊர்வலத்தில் வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி வேட்பாளருடன் இருவர் மட்டும் செல்ல வேண்டும் எனக் கூறினர். இதையடுத்து இருவருடன் சென்று கே.என். நேரு வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலரான விசுவநாதனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. திருச்சியை முன்மாதிரி நகரமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.