

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பேளூர் பேரூராட்சியில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த, பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், பயணிகள், வணிக நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பேளூர் பேரூராட்சியில், செயல்அலுவலர் பெ.ஜெயபிரகாஷ் தலைமையில் , பேரூராட்சி பணியாளர்கள், கரோனா நோய் பரவலை தடுப்பதில் முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற, 15 பேருக்கு, தலா ரூ 200 வீதம், ரூ.3000 பேரூராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்து வசூலித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.