மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்வு

தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்ந்துள்ளது.

News image
தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்வு
Updated On :19 மார்ச் 2021, 3:40 am

DIN

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டப் பள்ளிகளில் கரோனா தொற்று 97 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மாணவிகளுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 58 பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.

எனவே மற்ற பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 7 பள்ளிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

 மேலும் 8 ஆசிரியர்கள், 9 பெற்றோர்களுக்கு என மொத்தம் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.