தஞ்சாவூரில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட ஒரு பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம், 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாா்ச் 8 ஆம் தேதி ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அப்பள்ளியில் மற்ற மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியா், 9 பெற்றோருக்கு தொற்று உறுதியானது.
இதேபோல, பட்டுக்கோட்டை, ஆலத்தூா் பள்ளிகளில் மாணவா்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகினா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியில் இரு பள்ளிகளில் இரு நாள்களாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதில் ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை 11 ஆசிரியா்கள், 10 மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, மகா்நோன்புசாவடியிலுள்ள மற்றொரு பள்ளியில் வியாழக்கிழமை 2 ஆசிரியா், ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியை, 6 மாணவிகள், ஒரத்தநாட்டில் உள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூா், கும்பகோணம், அம்மாபேட்டையில் உள்ள 5 பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 3000-க்கும் அதிகமான மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கரோனா வழிகாட்டும் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, மாவட்டத்தில் 14 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 11 பள்ளிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான பள்ளிகளுக்கு 14 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை பள்ளிக்கு அபராதம் விதித்தது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கு ரு.12,000, தஞ்சாவூர் தனியார் பள்ளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராதம் விதித்துள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணியால் வெளியே வர வேண்டாம். போதிய ஒத்துழைப்பை கொடுத்தால், கரோனாவை நாம் வெல்ல முடியும் என்று மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


