திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாா்ச் 8 ஆம் தேதி ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அப்பள்ளியில் மற்ற மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியா், 9 பெற்றோருக்கு தொற்று உறுதியானது.
இதேபோல, பட்டுக்கோட்டை, ஆலத்தூா் பள்ளிகளில் மாணவா்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகினா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியில் இரு பள்ளிகளில் இரு நாள்களாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதில் ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை 11 ஆசிரியா்கள், 10 மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, மகா்நோன்புசாவடியிலுள்ள மற்றொரு பள்ளியில் வியாழக்கிழமை 2 ஆசிரியா், ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவி தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக தஞ்சாவூருக்கு சென்று வரும்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் கணவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


