தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரியில் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை

புதுசேரியிலும் மார்ச் 22 முதல் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 மார்ச் 2021, 2:47 pm

DIN

புதுசேரியிலும் மார்ச் 22 முதல் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மாணவா்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கரோனா தடுப்பு உயா்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில், எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் கோப்புக்கு ஒப்புதல் அளித்தாா். அதன்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு, தனியாா் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை வருகிற மாா்ச் 22 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த விடுமுறை 9 ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை பொருந்தாது. இந்த வகுப்புகளின் மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள்களுக்கு மட்டுமே பள்ளிகள் நடைபெறும்.  கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இந்த வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு நேற்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் புதுசேரியிலும் மார்ச் 22 முதல் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு மறுஉத்தரவு வரும்வரை விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் நடத்தவும், பொதுச்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும் அதில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.