மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏற்காடு: அதிமுக, திமுக, தேமுதிக உள்பட 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு  பழங்குடி தனி தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக வேட்பாளர்கள் உள்பட 13 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2021, 12:23 pm

DIN

சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடி தனி தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக வேட்பாளர்கள் உள்பட 13 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 3 சுயேட்சைகள் உள்பட 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

ஏற்காடு (பழங்குடி தனி)  தொகுதியில், அதிமுக வேட்பாளர் கு.சித்ரா, திமுக வேட்பாளர் சி. தமிழ்ச்செல்வன்,தேமுதிக வேட்பாளர் சி.குமார், ஐஜேகே வேட்பாளர் தி.துரைசாமி, நாம் தமிழர் வேட்பாளர் ஜோதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராமசாமி மற்றும் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மாற்று  வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 21 வேட்பாளர்கள், 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சேலம் மாவட்ட துணை ஆட்சியர் (முத்திரை) பி.கே. கோவிந்தன் தலைமையில், சனிக்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, தேமுதிக, ஐஜேகே, நாம் தமிழர்,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட  அரசியல் கட்சி வேட்பாளர்களின் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் கூடுதலாக தாக்கல் செய்திருந்த  வேட்புமனுக்கள், மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.