ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு என ஆதாரமற்ற குற்றச்சாட்டு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு என ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது.

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி .

Updated On :21 மார்ச் 2021, 1:19 pm IST

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு என ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு, மத்திய அரசு வழங்கிய ரூ. 15,000 கோடி தொகையை என்ன செய்தது என தெரியவில்லை, முதல்வர் நாராயணசாமி தலைமையில் முறைகேடு நடந்துள்ளதாக, பாஜக தரப்பில் சனிக்கிழமை குற்றப்பத்திரிகையை வெளியிட்டு குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி கூறியதாவது:

பாஜக ஆதாரமற்ற குற்றசாட்டுகளை காங்கிரஸ் அரசு மீதும், என் மீதும் வைத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை மூடியது, அப்போதை ஆளுநர் கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய பாஜக அரசு.

அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடியது, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்தது கிரண்பேடி. அதற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது.

புதுச்சேரி அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதாக அமீத்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தினேன். இதுவரை நிரூபிக்கவில்லை. 
நான் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் சவால் விடுத்தேன், பாஜக வாய்மூடி உள்ளது.

புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளையும் மிரட்டி ஆட்சிக்கு வரவேண்டும் என பாஜக முயற்சி செய்கிறது என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.