எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

4512 வேட்பு மனுக்கள் ஏற்பு; ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல்: சத்ய பிரத சாஹு

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

News image
4512 வேட்பு மனுக்கள் ஏற்பு; ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல்: சத்ய பிரத சாஹு
Updated On :22 மார்ச் 2021, 7:31 am

DIN


சென்னை: தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரத சாஹு, தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.70 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3.09 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். 7,192 திருநங்கைகள் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில் 4512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2743 நிராகரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3 பேர் மூன்றாம்பாலினத்தவர்.

இதுவரை இவிஜிப் செயலி மூலம் நேரடியாக பொதுமக்களிடமிருந்து  1971 புகார்கள் வந்துள்ளன. அதில், 1368 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக 2121 புகார்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் மொத்தம் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில்  1,49,567 பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.