பிரதமர் மோடி மே 30-இல் கன்னியாகுமரி வருகை: 3 நாள்கள் தியானம்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) கன்னியாகுமரி வருகிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.


நாகர்கோவில்: பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) கன்னியாகுமரி வருகிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம், மே 30-ஆம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று, அங்குள்ள தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மே 31), சனிக்கிழமை (ஜூன் 1) ஆகிய நாள்களிலும் தியானத்தில் ஈடுபடும் மோடி, ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் கன்னியாகுமரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தில்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் ஆகியோர், பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் இடம், விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கன்னியாகுமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...