ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரு கிலோ முள்ளங்கி ரூ.1 - விவசாயி வேதனை

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே விவசாயி ஒருவர் சந்தையில்  ஒரு கிலோ முள்ளங்கியை ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார். 

News image

ஒரு கிலோ முள்ளங்கி ரூ.1: விவசாயி வேதனை

Updated On :23 மார்ச் 2021, 6:20 am

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே விவசாயி ஒருவர் சந்தையில்  ஒரு கிலோ முள்ளங்கியை ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் விவசாயி. இவர் தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் முள்ளங்கி பயிர் செய்துள்ளார். 

Story image

முள்ளங்கியை நல்ல முறையில் பராமரித்து வந்துள்ளார். தற்போது முள்ளங்கி அமோக விளைச்சல் விளைந்துள்ளது. இந்நிலையில் சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் தற்போது சந்தையில்  ஒரு கிலோ முள்ளங்கியை வியாபாரிகள் ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

1 ரூபாய்க்கு விற்பனை செய்தால் அதனைப் பறித்து எடுக்கும் கூலி ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த முறை பயிர் செய்த போது ஒரு கிலோ முள்ளங்கி ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்துள்ளார். அதனை நம்பி பயிர் செய்து தற்போது பெரிய நஷ்டமடைந்துள்ளதாகக் கூறுகிறார் விவசாயி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.