சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஒரேமேடையில் பிரசாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின்-ராகுல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் வரும் மார்ச் 28-ம் தேதி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News image
ராகுல்காந்தி - மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :24 மார்ச் 2021, 5:27 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் மார்ச் 28-ம் தேதி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறவுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை  கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்கு மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.