பேரவைக் கூட்டத்தில் அனைத்து நாள்களும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டுமே: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக வரலாற்றில் பேரவைக் கூட்டத்தில் அனைத்து நாள்களும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டுமே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பேரவைக் கூட்டத்தில் அனைத்து நாள்களும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டுமே: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

தமிழக வரலாற்றில் பேரவைக் கூட்டத்தில் அனைத்து நாள்களும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டுமே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மதுரை மத்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை:-
தி.மு.க தலைவர் ஸ்டாலின், எங்கு சென்றாலும் என்னைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும் தான் பேசி வருகிறார். நான்கு வருடத்திற்கு முன்பு இந்த எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே தெரியாது என்றார். ஆனால் தற்பொழுது என்னைப் பற்றி பேசாமல் அவருக்கு தூக்கம் வருவது இல்லை. யார் என்றே தெரியாத ஒருவரை ஏன் தொடர்ந்து பேசி வருகிறார் என்று தெரியவில்லை. இந்த எடப்பாடி பழனிசாமி கிராமத்தில் இருந்து வந்தவன்.
எளிதாக ஆட்சியை கவிழ்த்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று நினைத்தார் அவர் கனவு ஒன்று கூட பலிக்கவில்லை. உங்களுடைய ஆதரவுடன் அனைத்தையும் தவிடுபொடியாக்கினேன். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சரானால் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தேன். மக்களாகிய உங்களுடைய ஆதரவினால் அனைத்திலும் வெற்றி கண்டேன்.
நான் முதலமைச்சராக ஆன பிறகு சட்டமன்றத்திலே பெரும்பாண்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு போட்டார். அப்படி பெரும்பாண்மையை நிரூபிக்கின்ற வேலையிலே, என்ன அட்டகாசம் செய்தார்கள். எழுந்து மேசையின் மீது நடனமாடுகிறார்கள். புத்தகத்தை தூக்கி வீசுகிறார்கள். இதற்கு எல்லாவற்றிற்கும் மேல் நீதிபதி இருக்கைக்கு சமமான சபாநாயகர் இருக்கைக்கு சென்று சபாநாயகரை கீழே தள்ளிவிட்டு அவர்கள் அமர்ந்த கொடுமையை நான் பார்த்தேன். சட்டமன்றத்திலே ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் தி.மு.கவினர்.
நாங்கள் பெரும்பாண்மையை நிரூபித்த உடன் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியிலே செல்கிறார். இப்படிப்பட்ட தலைவர் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நான் கிளைச் செயலாளர், ஒன்றியம், மாவட்டம், தலைமைப் பொறுப்புகளுக்கு வந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து, உங்கள் ஆதரவோடு முதலமைச்சர் என்ற பணி செய்து வருகிறேன். ஏதோ, ஸ்டாலின் தான், எனக்கு முதலமைச்சர் பதவி குடுத்ததைப் போல, எப்போழுது பார்த்தாலும் ஊர்ந்து போனியா, பறந்து போனிய என்று பேசிவருகிறார். 
மக்கள் ஆதரித்தார்கள், பெரும்பாண்மை சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள் அதானால் முதலமைச்சர் ஆனேன். ஸ்டாலினா என்னை முதலமைச்சர் ஆக்கினார். நீங்கள் எதிர்கட்சி தலைவர் பணியையாவது ஒழுங்காக செய்தீர்களா என்றால் அதுவும் கிடையாது. அவர் சட்டமன்றத்திற்கும் வர மாட்டார், என்ன நடக்கிறது என்றும் அறிந்து கொள்ள மாட்டார். நான் முதலமைச்சர் ஆனதிலிருந்து ஒருநாள் கூட சட்டமன்றத்திற்கு செல்லாமல் விடுமுறை எடுத்தது இல்லை. நூற்றுக்கு நூறு சதவிகிதம் நான் பணியாற்றி உள்ளேன். இதுவரை தமிழக வரலாற்றில் சட்டமன்ற கூட்டத்தில் அனைத்து நாட்களும் பங்கேற்ற முதலமைச்சர் நான் மட்டுமே.
உன்னால் முடியுமா. நான் கிராமத்திலிருந்து வந்தேன். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக செயலாற்றினேன். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளாத ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான். அண்ணா திமுக அரசு என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்கிறார். மதுரை மாவட்டத்தில் அண்ணா திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நிறைய பாலங்களை கட்டி கொடுத்திருக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com