அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சுழி பேருந்து நிலையச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்களும், சுகாதாரத்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட மனிதச்சங்கிலி நிகழ்ச்சியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தல், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல ஆகிய வாசகங்களடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியவண்ணம், அவ்வாசகங்களை முழக்கமிட்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்
அதையடுத்து வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் கண்ணன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அப்பேரணியானது திருச்சுழி ஊராட்சியின் முக்கியப்பகுதிகளான பேருந்து நிலையம், அருப்புக்கோட்டை செல்லும் சாலை, காரியாபட்டி செல்லும் சாலை ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது. அப்போது, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் முழக்கமிடப்பட்டன.
உடன் இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஊழியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


