பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு
Updated On :4 மே 2021, 5:46 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரஙன  தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6 முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஏப்ரல் 9-இல்ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-இல் ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயா்ந்து, ரூ.4,452 ஆக இருந்தது. 

வெள்ளி கிராமுக்கு 1.80 பைசா உயா்ந்து, ரூ.75.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1800 உயா்ந்து ரூ.75,300 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,452    

1 சவரன் தங்கம்...............................35,616

1 கிராம் வெள்ளி.............................75.30

1 கிலோ வெள்ளி.............................75,300

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,422

1 சவரன் தங்கம்...............................35,376

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.