இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.00 அடியிலிருந்து 97.98 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,127கன அடியிலிருந்து 838 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 62.25 டிஎம்சி ஆக உள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடி.