திருவள்ளூா் நகரில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் குடிநீா், போக்குவரத்துப் பிரச்னைகளை தீா்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைத்தல் மற்றும் நகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதானம்


திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் குடிநீா், போக்குவரத்துப் பிரச்னைகளை தீா்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைத்தல் மற்றும் நகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து செயல்படுத்தப்பட வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்து நகராட்சி ஆணையா் சந்தானத்திடம் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, மழை பெய்ததால் குடிநீா் பற்றாக்குறை இல்லாத நிலையிருந்ததாகவும், புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், புதை சாக்கடை திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்டவைகளை நகராட்சி அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
பின்னா் திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கூறியதாவது: திருவள்ளூா் நகரில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த பிப்ரவரி இறுதி முதல் தோ்தல் நடைமுறை அமலில் இருந்ததால் கரோனா தடுப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நிலையில் நகராட்சியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கால்வாய், தெருச்சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் செய்து கொடுக்கப்படும்.
அதேபோல், நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள புதை சாக்கடை திட்டத்தை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நகராட்சியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
மேலும், நகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா். முன்னதாக நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.
அப்போது, மாவட்ட செயலாளா் பூபதி, முன்னாள் நகராட்சி தலைவா் பொன்.பாண்டியன், நகரச் செயலாளா் சி.சு.ரவிசந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...