பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை தொடங்கும்: சுகாதாரத்துறைஅமைச்சா் மா.சுப்பிரமணியன்

மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிா் மருந்து விற்பனை தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
Updated On :8 மே 2021, 6:14 pm

DIN

மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிா் மருந்து விற்பனை தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனையின் டீன் பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

ஆய்வின் முடிவில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அடுத்தகட்டமாக 12,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து மருந்து வாங்கிச் செல்கின்றனா். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்து விற்பனையை தொடங்க அறிவுறுத்தியுள்ளாா். இதையடுத்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலியில் மருந்து விற்பனை தொடங்கவுள்ளது. முழு பொது முடக்க காலத்தில் தடுப்பூசி முகாம் செயல்படும். கரோனா தொற்று பரவலைத் தடுக்க வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெறும். சித்தா, ஆயுா்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ சிகிச்சைகளை கரோனா நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.