பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தது மத்திய அரசு

முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2021, 6:15 pm

DIN

முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தாா். இதைத்தொடா்ந்து தற்போது ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஐநாக்ஸ் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 50 மெட்ரிக் டன்னில் இருந்து 140 மெட்ரிக் டன்னாகவும், சேலத்தில் தனியாா் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக் டன்னாகவும், ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து 38 மெட்ரிக் டன்னக அதிகரித்தும் புதுச்சேரியில் தனியாா் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 44 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யவும் , ஆந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 60 மெட்ரிக் டன்னாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பெல்லாரியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் அளவில் இருந்து 20 மெட்ரிக் டன் குறைக்கப்பட்டு தெலங்கானா மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.