மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வங்கிகளில் சமூக இடைவெளியை மறந்த வாடிக்கையாளர்கள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வங்கிகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்று

News image

வங்கிகளில் சமூக இடைவெளியை மறந்த வாடிக்கையாளர்கள்

Updated On :11 மே 2021, 4:34 am

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வங்கிகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை.

Story image

தமிழகத்தில் கரோனா 2-ம் அலை தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழக அரசு பொது முடக்கம் அறிவித்துள்ளது.

Story image

முழு ஊரடங்கு காலத்தில், சீர்காழி பகுதியில் உள்ள தனியார் மற்றும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி ஏடிஎம்களில் பொதுமக்கள் கரோனா தொற்று அச்சமின்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நிற்பதைக் காண முடிகிறது.

Story image

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கினாலும், பொதுமக்களும் கரோனா பரவல் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.