ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் அருகே தனியார் நூற்பாலையில் 14 பேருக்கு கரோனா: கம்பெனிக்கு சீல்  

காங்கயம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு காங்கயம் வட்டாட்சியர் புதன்கிழமை சீல் வைத்தார்.  

News image
காங்கயம்-திருப்பூர் சாலை, பெருமாள்மலை பகுதியில் இயங்கி  வந்த நூற்பாலைக்குச் சீல் வைக்கும் காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ்
Updated On :12 மே 2021, 12:01 pm

DIN

காங்கயம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு காங்கயம் வட்டாட்சியர் புதன்கிழமை சீல் வைத்தார்.  

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே பெருமாள்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நூற்பாலையில் பணிபுரியும் வடமாநிலங்களைச் சேர்ந்த 4 பேருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்தும் நூற்பாலை இயங்கி வந்த நிலையில், இங்கு பணிபுரியும் 14 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நூற்பாலை வளாகத்திற்குள் இருந்த ஹாஸ்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில், புதன்கிழமையன்றும் இந்த நூற்பாலை செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்று தொடர்பான அரசின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, இந்த நூற்பாலைக்கு காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் புதன்கிழமை காலை 11 மணியளவில், இந்த ஆலையைப் பூட்டி, சீல் வைத்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.