பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா பரிசோதனைக்கு பயந்து கூலித் தொழிலாளி தற்கொலை

தக்கோலம் அருகே கரோனா பரிசோதனை செய்துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

News image
இறந்த சரவணன்
Updated On :12 மே 2021, 6:36 am

DIN

அரக்கோணம்:  தக்கோலம் அருகே கரோனா பரிசோதனை செய்துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள கிராமம் சுப்பா நாயுடு கண்டிகை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(45). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த மூன்று தினங்களாக காய்ச்சல் இருந்ததாம். இதனால் அவரது உறவினர்கள் அவரை கரோனா பரிசோதனை செய்துகொள்ள கட்டாயப்படுத்தினராம். 

இதற்கு பயந்த சரவணன், புதன்கிழமை காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இச்சம்பவம் குறித்து அறிந்த தக்கோலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர். 

இறந்த சரவணனுக்கு மனைவியும் கலை கல்லூரியில் படிக்கும் மகள் ஒருவரும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.