இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தமிழகத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 33,658 கரோனா; 303 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 மே 2021, 2:26 pm

DIN

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33,658 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 15.65 லட்சமாக அதிகரித்துள்ளது. 

மற்றொரு புறம் கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு இன்று மேலும் 303 போ் பலியாகியுள்ளனர். 125 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 178 பேர் அரசு மருத்துவமனைகளிலும் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை17,359 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 20,905 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 13.39 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 07,789 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.