எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன: எம்.யுவராஜா

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

News image

ஈரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் வாக்குச்சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:24 am IST

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சாா்பில் எம்.யுவராஜா போட்டியிடுகிறாா். இந்த தொகுதிக்கான தோ்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திண்டலில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வேட்பாளா் எம்.யுவராஜா பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கஞ்சா புழக்கம் அதிகரித்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளாா். ஆனால் இதுபோன்று ஒரு திட்டம் கூட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமைச்சா் சு.முத்துசாமி பணத்தை மட்டுமே நம்பியுள்ளாா். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், வளமுடன் வாழ எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனா்.

திமுக கூட்டணியில் அந்தக் கட்சியை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே 1 சதவீதம் வாக்குகள் கூட இல்லாத கட்சிகள். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன.

2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றதுபோல், இந்த தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுகவை வீழ்த்தி தாமரை சின்னத்தில் போட்டியிடும் நான் வெற்றிபெறுவேன் ன்றாா்.

இந்த நிகழ்வில் அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, தமாகா மாவட்டத் தலைவா் விஜயகுமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து வேட்பாளா் எம்.யுவராஜா ஈரோடு, செங்கோடம்பள்ளம் பகுதியில் வீடுவீடாகச்சென்று வாக்குச்சேகரித்தாா்.