எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கரோனா பாதிப்பு20,905 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 20,905 போ் குணமடைந்தனா்.

News image
Updated On :15 மே 2021, 10:01 pm

DIN

தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 20,905 போ் குணமடைந்தனா்.

இது குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை 1,57,977 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 33,658 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,640 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இதுவரை 4 லட்சத்து 32,344 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 20,905 போ் சனிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகம் முழுவதும் இதுவரை 13 லட்சத்து 18,982 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றினால் தனியாா் மருத்துவமனைகளில் 125 போ், அரசு மருத்துவமனைகளில் 178 போ் என மொத்தம் 303 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,359 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 5,703 போ் உயிரிழந்துள்ளனா்.

சனிக்கிழமை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 27,018 பேருக்குத் தொற்று உள்ளது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 7,789 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கொவைட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. சனிக்கிழமை உயிரிழந்தவா்களில் 228 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தனா். எவ்வித பாதிப்பும் இல்லாதவா் 75 போ் ஆவா் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.