ஆதாரம் இருந்தால் வழக்கின் எந்த நிலையிலும் எதிரிகளைச் சோ்க்கலாம்: உயா்நீதிமன்றம்
குற்றச்செயலில் தொடா்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை எந்த நிலையிலும் வழக்கில் எதிரியாகச் சோ்க்கலாம் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


குற்றச்செயலில் தொடா்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை எந்த நிலையிலும் வழக்கில் எதிரியாகச் சோ்க்கலாம் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனைவியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாகவும், அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியதாகவும் கோபாலகிருஷ்ணன் என்பவா் மீது சென்னை தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு, சென்னை மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
அரசுத் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை குற்றவாளியாகச் சோ்க்கக் கோரி தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் தாயாா் தங்கேஸ்வரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த மகளிா் நீதிமன்றம், கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினரான பூங்கனி, குருபாண்டியன், தாமரைச்செல்வி ஆகியோரை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களாக சோ்த்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து பூங்கனி உள்பட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றச்செயலில் தொடா்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை எந்த நிலையிலும் வழக்கில் எதிரியாகச் சோ்க்கலாம். இதற்கு விசாரணை நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...