தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருமங்கலம், பேரையூர் அரசு மருத்துவமனையில் ஆர்.பி உதயகுமார் ஆய்வு

பேரையூர் அரசு மருத்துவமனையில் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :16 மே 2021, 12:03 pm

DIN

பேரையூர் அரசு மருத்துவமனையில் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி அதனைத் தொடர்ந்து பேரையூர் அரசு மருத்துவமனையை திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி உதயகுமார்  ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

தற்போது திருமங்கலம் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை. அதேபோல் பேரையூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளேன்.

தற்போது இரண்டாம் அலையில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை. தற்போது நேரு ஸ்டேடியத்தில் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கச் செல்லும் மக்களை ஒழுங்குபடுத்த அரசு தவறி விட்டது. இதனால் மக்கள் மிகவும் கொதிப்படைந்து மறியலில் ஈடுபட்டனர். ரெம்டெசிவர் மருந்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கிடைக்க அரசே நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது இதற்கு ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்து வழங்க வேண்டும். அப்படி செய்தால் எந்த முறைகேடும் நடைபெறாது. முதல் அலையில் மக்களுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் மருந்து வசதிகள் அனைத்தும் கிடைக்கப் பெற்றன. ஆனால் இன்றைக்கு இரண்டாம் அலையில் மருத்துவமனையில் எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று தங்களை சேர்க்க மக்கள் வரிசையாக நிற்கின்ற அவலம் உள்ளது. இதைத் தடுக்க இன்னும் கூடுதலாக நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தற்போது வார் ரூம் என்று கட்டுப்பாட்டு மையத்தை அரசு திறந்து வருகிறது. அதை நான் குறை கூறவில்லை ஆனால் ஏற்கனவே 38 வருவாய் மாவட்டங்களில் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முன்னாள் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதில் தகுந்த வழிகாட்டுதல், அறிவுரைகள், மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது. இதில் அனைத்து தகவல் தொழில் நுட்பத்துடன் அனைத்து கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதையும் அரசு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்.

தற்போது டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனா, டவ்தே புயல் ஆகிய இரண்டு பேரிடர்களை அரசு கூடுதல் கவனம் செலுத்தி மக்களை காக்க வேண்டும்.

மக்கள் செத்து மடிவதை கண்டு அரசு சாக்கு போக்கு சொல்லாமல், விலை மதிக்க முடியாத மக்கள் உயிரைக் காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதில் பேரையூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஷ்குமார், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.