தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்திலேயே ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் உற்பத்திக்கு நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்திலேயே கரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :18 மே 2021, 6:54 am

DIN

தமிழகத்திலேயே கரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மருத்துவ உயிர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், கரோனா தொடர்பான மருந்துகளை தமிழகத்திலேயே  உருவாக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது, 

தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்காணும் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும்.

குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ வரும் 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை அளிக்க வேண்டும். 

இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விருப்ப கருத்துகள் அடிப்படையில் கரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும்  என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.