சிவகாசி: ஊரடங்கு விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு கடையில் பட்டாசு தயாரித்ததாக ஒருவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்து பட்டாசு கடைக்கு சீல் வைத்தனர்.

சிவகாசி சாத்தூர் சாலையில் உள்ள பேராபட்டி பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறுவதாக சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையில் ஓர் பட்டாசு கடையில் ஒருவர் பேன்சி ரக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த பட்டாசுக்கடை முருகேசன் என்ற பெயரில் உரிமம் பெற்று இருப்பது தெரியவந்தது.

மேலும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது பூரணி சுரேஷ்குமார் வயது (63) என தெரியவந்தது. இதையடுத்து அவர் தயாரித்து வைத்திருந்த 250 பாக்கெட் பேன்சி ரக பட்டாசு மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படும் மருந்து இரண்டு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பட்டாசுக் கடையைப் பூட்டி வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதுகுறித்து அனுப்பங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி பிரபு அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு காவல்துறையின வழக்குப்பதிவு செய்து சுரேஷ் குமாரை கைது செய்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com