தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச உணவு மையம்: எம்எல்ஏ தொடக்கிவைத்தார்

இளையான்குடி வட்டாட்சியர் முயற்சியில் அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் மையத்தை எம்எல்ஏ தமிழரசி தொடங்கி வைத்தார்.

News image
இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த் முயற்சியால் அவரது அலுவலகத்தில் இலவச உணவு வழங்கும் மையத்தை எம்எல்ஏ தமிழரசி தொடங்கி வைத்தார்.
Updated On :19 மே 2021, 10:29 am

DIN

இளையான்குடி வட்டாட்சியர் முயற்சியில் அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் மையத்தை எம்எல்ஏ தமிழரசி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த் முயற்சியால் தனது அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட இலவச உணவு வழங்கும் மையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 

இளையான்குடியில் பள்ளி மாணவி சாலியா பர்வீன், முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக ரூ 5 ஆயிரத்துக்கான காசோலையை எம்எல்ஏ தமிழரசியிடம் வழங்கினார்.

இளையான்குடியில் பள்ளி மாணவி சாலியா பர்வீன், முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக ரூ 5 ஆயிரத்துக்கான காசோலையை எம்எல்ஏ தமிழரசியிடம் வழங்கினார்.

இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர் . முகாமை தமிழரசி தொடங்கிவைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் ஆனந்த் செய்திருந்தார்.

அதன்பின் தன்னார்வலர்கள் மூலம் கொடுக்கப்பட்ட சுடுதண்ணீர் இயந்திரங்களை எம்எல்ஏ தமிழரசி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினார். 

இளையான்குடியைச் சேர்ந்த செவித்திறன் குறைவுடைய மாணவி சாலியா பர்வீன் தான் சேமித்து வைத்திருந்த ரூ 5 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக தமிழரசியிடம்  வழங்கினார். 

நிகழ்ச்சிகளில் இளையான்குடி வருவாய் வட்டாட்சியர் ஆனந்த், தனி வட்டாட்சியர் செந்திவேல், அரசு மருத்துவர் வசந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன் உள்ளிட்ட இளையான்குடி பகுதி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த் கூறுகையில், பொதுமுடக்க காலத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பசியுடன் செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் அலுவலக வளாகத்திலேயே இலவசமாக உணவு வழங்கும் மையத்தை திறந்துள்ளோம். தினமும் இங்கு பசி என வருபவர்களுக்கு  தொடர்ந்து உணவு வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.