/

மதுரை தோப்பூரில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்துவைத்தார்

மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 

News image
மதுரை தோப்பூரில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்துவைத்தார்
Updated On :27 ஜனவரி 2024, 8:16 pm

DIN

மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய அளவில் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்காணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்பட்டு பலர் இறக்கும் சூழல் உருவாகியது. இதனைத் தடுக்கும் வகையில் தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனைக்கு அருகே உள்ள காலியிடத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதில் 500 படுக்கை வசதிகளும் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

புதிய கரோனா சிகிச்சை மையத்தில் முதற்கட்டமாக 200 படுக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும், தோப்பூரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, சு.வெங்கடேசன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம்தென்னரசு, பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், டீன் ரத்தினவேல், மருத்துவ அலுவலர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.