2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

அதி தீவிர புயலாக மாறுகிறது யாஸ்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 மே 2021, 9:48 am

DIN

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

26.05.21 முதல் 29.05.21: 
கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச  வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

தக்கலை, நாகர்கோவில், முதுகுளத்தூர், நாகர்கோவில், தானியங்கி மழைமானி 1 செ.மீ மழை பெய்துள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

25.05.21 முதல் 27.05.21: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

25.05.21 முதல் 26.05.21: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

25.05.21: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 100-110 கி.மீ வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு வங்கக்  கடல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கீ.மீ வேகத்தில் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும்  வீசக்கூடும். 

26.05.21: வட மேற்கு வங்கக் கடல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 155 முதல் 165 கி.மீ வேகத்திலும்  இடையிடையே 185 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் யாஸ் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில்  ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே பாலசுருக்கு அருகே கடக்கக்கூடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.