கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பருப்பு, பாமாயில், எண்ணெய் ஒப்பந்தத்திற்குத் தடை: நீதிமன்றம்

பொதுவிநியோகத் திட்டத்திற்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

News image
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
Updated On :26 மே 2021, 11:12 am

DIN

பொதுவிநியோகத் திட்டத்திற்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எண்ணெய், பருப்பு ஒப்பந்தத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்புக்குத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது கரோனா காலத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அவசரகால ஒப்பந்தம் விடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.