மேகதாது திட்டம் அனுமதிக்கப்படாது: தமிழக அரசு
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழக அரசின் எதிர்ப்பால் காவிரி ஆணையத்தின் 3 கூட்டங்களில் மேகதாது பற்றி விவாதிக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்று பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுமானத்தில் விதிகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...